குமரியில் மீன்வள மசாேதாவுக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரியில் மீனவர்கள் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் மீன் வள மசோதா 2021 ற்க்கு, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் துறை, பெரிய காடு, புத்தன்துறை உட்பட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பள்ளம் துறை மீனவர் கிராமத்தில் மீனவர்கள் கடற்கரையில் நின்று கையில் கண்டன பதாகைகளுடன் மத்திய அரசை எதிர்த்தும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் மேற்கொண்டனர். அதேப்போன்று கரைகளில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வரும் மசோதா தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக ஆக்கும் என்பதால் அந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூறி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.