திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே 2 நாட்களுக்கு ரயில் சேவை கிடையாது
மண் சரிவு உள்ளதால் 2 நாட்களுக்கு திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இரயில் சேவை கிடையாது என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பாறசாலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் இரயில் தண்டவளம் முழுவதும் மண்ணால் முழ்கி இருந்தது, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மண் மூடிய நிலையில் அதனை மாற்றுவது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான 15 க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 ஆவது நாளாக நிறுத்தப்பட்ட நிலையில் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இரயில் தண்டவாள பாதிப்பை முழுமையாக சரிசெய்ய இரண்டு நாள் ஆகும் எனவும் இரண்டு நாள்களுக்கு பின்னர் சோதனை ஓட்டம் நடத்திய பின்னரே முழுமையான ரயில்சேவை தொடங்கும் என தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.