எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: குமரி அதிமுக சார்பில் மரியாதை
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, குமரி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, குமரி மாவட்ட அதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு குமரிமாவட்ட அதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதே போன்று தோவாளை, தக்கலை உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் சிலைகள் மற்றும் திருவுருவ படங்களுக்கு, அதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், சாந்தினி பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.