அரிசிஆலையால் பொதுமக்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்ட மேயர்
குமரியில் அரிசி ஆலையால் பொதுமக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை மூலம் மேயர் தீர்வு கண்டார்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கீழ குஞ்சன்விளை பகுதியில் செயல்படும் தனியார் அரிசி ஆலையில் இருந்து கரும் துகள்கள் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரிசி ஆலை உரிமையாளரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அரிசி ஆலை செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதே போன்று பொதுமக்களின் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும் என்றும் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் தன்னிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார், இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.