மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடை விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10 ஆம் கொடை விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிசட்டம் 188 ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் அன்றைய தினம் மாவட்ட தலைமை கருவூலம், கிளை கருவூலங்கள், அரசின் அவசர பணிகள் தேவையான பணிகளை கொண்டு இயங்கும். என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.