குமரி கோவில்களில் மங்களம் நிறைக்கும் நிறை புத்தரிசி சிறப்பு பூஜை

குமரிமாவட்டத்தில் உள்ள மன்னர் கால கோவில்களில் கேரளா ஆகம விதிப்படியே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.;

Update: 2021-08-17 14:15 GMT

முந்தைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்னரும் குமரிமாவட்டத்தில் உள்ள மன்னர் கால கோவில்களில் கேரளா ஆகம விதிப்படியே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நடைபெறும் பூஜைகளில் முக முக்கியமானதாக உள்ள நிறை புத்தரிசி பூஜை சிறப்பு பெற்றதாக அமைகிறது, அதன் படி நடைபெறும் நிறை புத்தரிசி பூஜையில் கலந்து கொண்டு நெற்கதிர் வாங்கி வீட்டில் கட்டினால் மங்களம் உண்டாகும், பஞ்சம் நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இந்த நிறை புத்தரிசி பூஜைக்காக கோவிலுக்கு சொந்தமான வயல்களில் அறுவடைக்கு தயாராக இருக்கின்ற நெற்கதிர்களை அறுவடை செய்து மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அதன் படி இன்று தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், அருள்மிகு நாகராஜா கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News