கன்னியாகுமரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி! மக்கள் அச்சம்!!
கன்னியாகுமரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி ஏற்பட்டிருப்பது. இதனால் மக்கள்அச்சமடைந்துள்னனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 49 வயதான தொழிலதிபர் ஒருவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பின் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு உடல்நிலை சரியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திடீரென உடல்வலி மற்றும் கொரோனா அறிகுறிகள் காரணமாக மீண்டும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சோதனை மேற்கொண்டதில் கருப்பு புஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு முதன் முதலாக உயிர்ப்பலி ஏற்பட்டு இருப்பது மாவட்ட மக்களை அச்சம் அடைய செய்து உள்ளது.