வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து வேட்டையாடிய5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-05 12:44 GMT

வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச்சரகம் தெற்குமலை மேற்கு பீட் பகுதியில் சில நபர்கள் நாய்களுடன் சென்று விலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதாக வனதுறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற வன காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெற்குமலை மேற்கு பீட் பகுதியின் தொலைவில் தடை செய்யப்பட்ட பகுதியில் 5 நபரால் வேட்டை நாயுடன் வலம் வருவதை கண்ட வன காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இராமனாதிச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் வேட்டை நாயை வைத்து விலங்குகளை வேட்டையாட முயற்சித்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வேட்டையாட முயற்சி செய்த நாய் மற்றும் ஐந்து நபர்களை வன காவலர்கள் கைது செய்தனர். மேலும் ஐந்து நபர்களுக்கும் ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.10000/- அபராத கட்டணமாக பெறப்பட்டது.

இது போன்று இனி வரும் காலங்களில் வேட்டையாட செல்லக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த வனகாவலர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.

Tags:    

Similar News