குமரி-ரேஷன் கடைகளில் பூஞ்சைகள் நிறைந்த அரிசி விநியோகம்-பொதுமக்கள் வேதனை
குமரி மாவட்ட ரேஷன் கடைளில் பூஞ்சைகள் நிறைந்த அரிசி விநியோககிக்க படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என அரசு அறிவித்தது.
அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இன்று திறக்கப்பட்டன, ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் மக்கள் முடங்கிய நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவித்த மக்கள் ரேஷன் கடையில் திறக்கப்பட்டதும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.
ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் அரிசியில் வண்டுகள் மொய்த்தும் பூஞ்சைகள் தாக்கியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்த அரிசி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
பறக்கை செட்டி தெரு ரேஷன் கடையில் பூஞ்சைகள் நிறைந்த அரிசியை கண்டு பொதுமக்களில் பலர் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றனர், அரிசிக்கு பில் போட்ட சிலர் மட்டும் வேறு வழியின்றி பூஞ்சை நிறைந்த அரிசியை வாங்கி சென்றனர்.
இதே போன்று பெரும்பாலான ரேஷன் கடைகளிலும் பூஞ்சைகள் நிறைந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது, இந்நிலையில் ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அரிசியை எப்படி சாப்பிடுவது என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் அரசு பூஞ்சைகள் நிறைந்த இந்த அரசிகளை திரும்ப பெற்று தரமான அரிசியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.