அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள் கைது
குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன்(40). இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் தேன்மொழி (13), மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்கள் ஆலங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு வடித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜன் அனுமதி இன்றி தனது வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இன்று அதிகாலை திடீரென வெடித்தது, இதில் வர்ஷா உடல் சிதறி பலியானார்.
மேலும் ராஜனின் வீடும் இடிந்து விழுந்தது, இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த கல் விழுந்ததில் பார்வதியும் பலத்த காயம் அடைந்தார். இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ராஜனை போலீசார் கைது செய்தனர், இந்நிலையில் பட்டாசு தயாரிக்க வெடிமருந்து சப்ளே செய்த சகோதரிகளான ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்த ராமலெட்சுமி மற்றும் தங்கம் ஆகியோரை ராஜாக்கமங்களம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 75 கிலோ வெடிமருந்தையும் பறிமுதல் செய்தனர், மேலும் இவர்களுக்கு வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது, வேறு யாருக்கெல்லாம் வெடிமருந்து கொடுத்து உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.