குமரியை மிரட்டும் கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

குமரியை மிரட்டும் கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.;

Update: 2021-11-25 15:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 3 நாட்களாக பெய்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் விளை நிலங்களை பெரும் சேதம் அடைந்தன. இதன் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வராத நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. கனமழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இதனிடையே தற்போது பெய்து வரும் கனமழை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News