குமரியில் அரசின் சாதனைகள் புகைப்படக் கண்காட்சி: பொதுமக்கள் பார்வை
குமரியில் வைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.;
தமிழக அரசு மேற்கொள்ளும் சிறப்பு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய கண்காட்சி தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட சாதனைகள் மற்றும் செயல்திட்டங்கள் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய கண்காட்சி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தக்கலை பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டனர்.