"அரசுக்கு நல்லபுத்தி கொடு விநாயகா" : குமரியில் இந்து முன்னணி நூதன போராட்டம்

குமரியில் அரசுக்கு நல்லபுத்தி கொடு விநாயகா என கூறி இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-03 12:45 GMT

குமரியில் இந்து முன்னணி சார்பில் பிரார்த்தனை போராட்டம் நடத்தி இறைவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.

இதனிடையே தொற்று குறைந்ததாக கூறி சுற்றுலா தலங்கள் உட்பட அனைத்திற்கும் தளர்வுகள் அறிவித்துள்ள அரசு விநாயகர் சதூர்த்திக்கு மட்டும் தடை விதித்து இருப்பது இந்து விரோத செயல் என இந்து இயக்கங்கள் குற்றம் சாட்டின.

இதனிடையே விநாயகர் சதுர்த்தி 2021 தடை அதை உடை என்ற வேண்டுதலை முன் வைத்தும், விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் திருமேனியை வீதிகளில் வைத்து வழிபட தடை விதிக்க தமிழக அரசுக்கு நல்ல புத்தி வழங்கிட வேண்டியும் இந்து முன்னணி அமைப்பு நூதன போராட்டத்தை மேற்கொண்டது.

அதன் படி நாகர்கோவில் நாகராஜா திருக்கோவில், கோதை கிராமம் வரதராஜ பெருமாள் கோவில், வடசேரி பால கிருஷ்ணன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் பிரார்த்தனை போராட்டம் நடத்தி இறைவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News