மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை

மீன் வலை மற்றும் டொயினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று, குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-02 10:45 GMT

கோப்பு படம் 

மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களின் ஜிஎஸ்டி வரி கூடிய நிலையில்,  அதனை குறைக்க தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைர் சேவியர் மனோகரன் கூறும் போது,  மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பின் போது மீனவர்கள் பயன்படுத்தும் டொயினுக்கு18 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 15 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதித்தது. இது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வரிவிதிப்பாக உள்ளது என மீனவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், முந்தைய தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக டொயினுக்கு 12 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 5 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் வலைக்கான ஜிஎஸ்டி வரி 5 இல் இருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தற்போதைய தமிழக அரசு மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News