ஒரே தெருவில் 8 பேருக்கு கொரோனா - தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டது.

குமரியில் ஒரே தெருவில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டது.;

Update: 2022-01-06 15:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை ஊரில் உள்ள செட்டி தெருவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் 11 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 19 ஆக உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக பறக்கை செட்டி தெரு பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இயங்கி வந்த ரேஷன் கடையும் மூடப்பட்டதோடு அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு பொருட்களும் தற்காலிகமாக நிறுத்தபட்டு உள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Similar News