நீட் தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம்- தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு
நீட் தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது என சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டினார்.;
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம் மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள், கூடங்கள் ஆகியவை இருக்கும் அளவை பொறுத்து சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 600 சதுர அடிக்கும் குறைவான கட்டடங்களுக்கு 25 சதவிகிதம் வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
1,201 முதல் 1,800 சதுர அடி உள்ள கட்டடங்களுக்கு 75 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது, இதனிடையே பொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் சொத்து வரி உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தி.மு.க. ஆட்சியில் அவர்களின் ஆதரவோடு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது என குற்றம் சாட்டினார்.