மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது.

Update: 2021-06-24 09:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் பள்ளிகளிலேயே வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் பாட புத்தகங்களை விநியோகிக்க அரசு உதரவிட்டத்தை தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா இலவச புத்தகங்கள் குமரிமாவட்டத்தில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

அதன் படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News