குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு
குமரி பெருமாள் கோயில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தியும் பழமையும் பெற்ற திருவாழ்மார்பன் கோவில். 108 திவ்ய திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபட்டனர்.