குமரியில் அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
குமரியில் அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிராம மக்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.
இதனிடையே அம்மா மினி கிளினிக்கிற்க்கு பொதுமக்கள் வருவதில்லை என்பதால் அந்த திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முதலாக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் அம்மா மினி கிளிணிக்கை மீண்டும் திறக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.