குமரியில் மறுமணம் செய்தவர் மரணம்; முதல் மனைவி பாேலீசில் புகார்

குமரியில் மனைவியை பிரிந்து மறுமணம் செய்தவர் மரணம் அடைந்த நிலையில் மரணத்தில் மர்மம் உள்ளதாக முதல் மனைவி புகார்.;

Update: 2021-08-25 14:00 GMT

மரணமடைந்த தர்மராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு குண்டறவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(50). புளி வியாபாரம் செய்து வந்த இவருக்கு விழுந்தியம்பலம் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த 13 வருடங்களுக்கு முன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்த தர்மராஜ் இரண்டு வருடங்களுக்கு பின்னர் திருவட்டார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், குழந்தைகள் இரண்டு ஆன பின்பும் இரண்டாவது மனைவியை தர்மராஜ் தனது சொந்த வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே தர்மராஜின் தந்தை குடும்ப சொத்தில் சில பங்கை தர்மராஜின் முதல் மனைவியின் மூத்த மகன் பெயரில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 ம் தேதி தர்மராஜ் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் உள் காயம் மாற நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நாட்டு மருந்து குடித்த சில மணி நேரத்தில் தலை சுற்றல் ஏற்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தர்மராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது முதல் மனைவி அனிதா புதுக்கடை காவல் நிலையத்தில் தனது கணவர் பெயரில் உள்ள சொத்திற்காக அவரை கொலை செய்து உள்ளனர் என்றும் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி மகேஷ்வரி மீது புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் தர்மராஜ் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தர்மராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் குழித்துறை அரசு மருத்துவமனை பிரேத அறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News