குமரியில் ஊரடங்கு விதி மீறல் 19 பேர் மீது வழக்குப் பதிவு-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

குமரியில் ஒரே நாளில் 1989 பேருக்கு அபராதம், 19 வழக்குகள், 19 வாகனங்கள் பறிமுதல்- குமரி போலீசார் நடவடிக்கை

Update: 2021-06-13 10:51 GMT

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியான முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை, மாநகராட்சி, காவல்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்துள்ள போலீசார் 24 மணி நேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் முக கவசம் அணியாமல் வந்த 1950 பேருக்கும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 39 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறியதாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறிய 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News