ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

குமரியில் ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2022-01-23 16:45 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. நோய்த்தொற்று பரவல் அதிகமாக காணப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அரசின் முழு ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி பின்பற்றப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை பிடித்த போலீசாரின் உதவியுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News