நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 75 பறக்கும் படைகள் - குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக குமரியில் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்தார்.

Update: 2022-02-14 17:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறும் போது, தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன, நேற்றுவரை ஆவணங்கள் இருந்து கொண்டு செல்லப்பட்ட 50 லட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வாக்கு எனது எதிர்காலம் என்ற தலைப்பில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News