குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்தன காளைகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Update: 2022-01-17 15:31 GMT

கன்னியாகுமரியில் மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் உழவர்களின் உற்ற தோழனாக இருக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் விழாவானது நெல் விவசாயத்தை முதன்மை விவசாயமாக கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுவண்டி போட்டியும் நடைபெறும்.

இந்நிலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த போட்டியில் இலக்கை அடைய சீறி பாய்ந்து சென்ற காளைகளை அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News