குமரியில் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குமரியில் 200 கோடி ரூபாய்க்கான வங்கி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளது.;

Update: 2021-12-16 14:30 GMT

குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 வங்கி கிளைகளில் உள்ள வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 1800 க்கும் மேற்பட்டோர் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குமரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 200 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் மாணவர் கடன், விவசாய கடன், சுய உதவி குழு கடன் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் ஆதரவை தர வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News