பொதுமக்களின் லைக்கை அள்ளும் குமரி காவல்துறையின் விழிப்புணர்வு மீம்ஸ்கள்
இளைஞர்களை கவருவதுடன் பலரது லைக்கை அள்ளிக்கொண்டு இருக்கிறது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு மீம்ஸ்கள்.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டு உள்ள சமூக வலைதளங்களில் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
தலைக்கவசம் அணிவதன் அவசியம், முக கவசம் அணிவதன் அவசியம், கொரோனா விழிப்புணர்வு, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே என்னதான் அப்டேட்டேட் பைக் வைத்து இருந்தாலும் தலைக்கு வலிமையான தலைக்கவசம் முக்கியம் என்ற காவல்துறையின் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.