குமரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
குமரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி இந்த வாகனம் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும்.