குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்
குமரியில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற நிலையில், போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்க வழக்கத்திற்கு மாறாக பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கும்பலாக திரண்ட நிலையில் ஒரே நேரத்தில் அனைவரையும் கூட்டத்தில் அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனிடையே ஆவேசமடைந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் மீனவர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.