சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
குமரியில் 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு நடைபெற்ற 18 விதமான அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.;
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் காணப்படும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி கோவிலில் அமைந்துள்ள 18 அடி உயர பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலைக்கு 18 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. பால், பன்னீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் என விதவிதமாக நடைபெற்ற அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகளில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.