ஆஞ்சநேயர் ஜெயந்தி :சுசீந்திரத்தில் 1 லட்சம் லட்டு தயாரிப்பு தீவிரம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம் கோவிலில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.;

Update: 2022-01-01 12:15 GMT
பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயாராக உள்ள லட்டுகள். 

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, வரும் ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள,  தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் காணப்படும்,  சுசீந்திரம் தானுமாலயன் கோவிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயர் சன்னதியிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெய் ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் லட்டு தயாரிப்பு பணியில் 300 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி தயாரிக்கப்படும் இந்த லட்டுகள் ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News