2 தவனை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் தான் மது: குமரியில் குடிமகன்கள் கலக்கம்
குமரியில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மது என்பதால் குடிமகன்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தயக்கம் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி முகாம் அமைத்தல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களை தேடி சென்று தடுப்பூசி செலுத்துவது என்ன பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் அதற்கான சான்றிதழை காண்பித்தார் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விநியோகிக்கப்படும் என அறிவித்தது.
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் காண்பித்தவர்களுக்கு மட்டுமே மதுவகைகள் விநியோகம் செய்யப்பட்டன.
இதனிடையே நமக்கெல்லாம் கொரோனா வராது நமக்கு எதுக்கு தடுப்பூசி என உதார் விட்டு காலம் கடத்திய குடிமகன்கள் மது வாங்க முடியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.