குமரியில் அதிமுக சார்பில் 3வது நாளாக விருப்ப மனு வினியாேகம் தீவிரம்

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து குமரியில் அதிமுக சார்பில் 3 ஆவது நாளாக விருப்பமனு வழங்கப்பட்டது.;

Update: 2021-11-29 06:34 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குமரியில் விருப்பமனுக்கள் வழங்கும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விருப்பமனு வினியோகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மூன்றாவது நாளான இன்று மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால் ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள், இளம் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.

Tags:    

Similar News