குமரியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
குமரியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாணவர் அணி சார்பில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி வீரவணக்கம் மற்றும் மரியாதை செலுத்தினர்.
மேலும் மாநகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிதவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோகன், மாநில கழக அமைப்பு செயலாளர் பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.