வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் - கேரளா அழகி உட்பட 4 பேர் கைது

குமரியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரளா அழகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-02-26 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் இரவு பகலாக சந்தேகம்படும் படியாக பெண்கள், ஆண்கள் நடமாட்டம் இருந்து வருவதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலிசார் அங்கு சென்று பார்த்ததில் அந்த வீட்டில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுப்பட்டதாக திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் மற்றும் மருங்கூர் பகுதியை சேர்ந்த முத்துவிக்னேஷ், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த இரு பெண்கள் ஆகியோரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். ஆரல்வாய்மொழியை சேர்ந்த இரண்டு பெண்களை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர், இச்சம்பவம் செண்பகராமன்புதூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News