வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா
குமரியில் பிரசித்தி பெற்ற வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்த்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோவில்.
பிரசித்தியும் பழமையும் கொண்ட இந்த கோவிலின் 18-வது வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று1808 பொங்கல் வழிபாடு நடைப்பெற்றது.
ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் இருந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலைய சாலை வரை வரிசையாக பெண்கள் அமர்ந்து பொங்கல் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
இதில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.
இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.