குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையின் மாஸ் பிரச்சாரம் தொடங்கியது.

விழிப்புணர்வு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது மக்கள் பெரிது உணர்வார்கள் தேவையில்லாமல் வெளியே வரமாட்டார்கள்

Update: 2021-05-21 13:45 GMT

குமரியில் காவல்துறையின் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் இதனை எதிர்கொள்ளவும், பரவலை தடுக்கவும் மாவட்ட காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய எஸ்.பி பத்ரி நாராயணன் கூறும் போது காவல் துறையினர் மக்கள் நலன் கருதி தளராமல் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர். மக்கள் தேவை இல்லாமல் வெளிவருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும், விழிப்புணர்வு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது மக்கள் பெரிது உணர்வார்கள் தேவையில்லாமல் வெளியே வரமாட்டார்கள் என்பதால் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய உட்கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News