விதிமீறிய வாகனங்கள் பறிமுதல் - வழக்குப்பதிவு -குமரி போலீஸ் அதிரடி

சட்டம் தன் கடமையைச் செய்யும்.;

Update: 2021-05-18 13:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசின் உத்தரவு படி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளவும் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள், முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி இருப்போர், வாகனங்களில் வீதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாகன சோதனையின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள், முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி இருப்போர் வாகனங்களில் விதிமுறைகள் மீறிய குற்றங்கள் என அனைவரின் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இதில் கன்னியாகுமரி உட்கோட்டத்தில் 246 வழக்குகளும் நாகர்கோவில் உட்கோட்டத்தில் 231 வழக்குகளும் , குளச்சல் உட்கோட்டத்தில் 414 வழக்குகளும், தக்கலை உட்கோட்டத்தில் 605 வழக்குகளும் போடப்பட்டுள்ளது, மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஊரடங்கு நாட்கள் முழுவதும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News