முழு ஊரடங்கு -முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
கொரோணா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு விதித்துள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சுசீந்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன, மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, நீதிமன்ற சாலை, முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.