தனிமையில் உள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்து உள்ளது.
அதன்படி தானாக முன்வந்து உதவி செய்ய விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவரிடம் இருந்து பெறப்படும் பொருட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளிகளுக்கும், உணவு, அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்படும்.