கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் 62 வயதான ஜனார்த்தனம். இவர் ராஜபிரபு என்பவரிடம் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ராஜ பிரபுவின் லாரியில் இருந்த ஜாக்கி மற்றும் வீல் ஸ்பேனரை கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜனார்த்தனம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆசாரிபள்ளம் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.