குமரியில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி எஸ்.பி ஆபிசில் புகார்
குமரி போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி புகார் அளித்தார்.;
கணவன் மீது போலீஸ் எஸ்பி ஆபிசில் புகார் கொடுத்த இளம் பெண்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஷெர்ரி மிராபெல், இவருக்கும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அல்பினோ என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில் அல்பினோவின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொடுப்பதற்காக ஷெர்ரி மிராபெல் கொண்டு வந்த 65 சவரன் தங்க நகைகளை அல்பினோ வாங்கியதோடு கூடுதல் நகை மற்றும் பணம் வாங்கி வர கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் ஷெர்ரி மிராபெல் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் அல்பினோ வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கோட்டார் காவல் நிலையத்தில் ஷெர்ரி மிராபெல் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த ஷெர்ரி மிராபெல் தனது நகை, பணம் அனைத்தையும் அபகரித்து கொண்டு தன்னையும் தனது குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கூறி கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.