குமரியில் போர்க்கால நடவடிக்கை தேவை - எம்.ஆர் காந்தி

கனமழையால் குமரியில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை தேவை - சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி

Update: 2021-05-29 07:13 GMT

யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது, இந்த மழையின் காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் விளை நிலங்களை மழை வெள்ளம் ஆக்கிரமித்தது.

இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான எம்.ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் குமரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



Tags:    

Similar News