கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எம்.ஆர் காந்தி இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த வாகனத்திலும் வீதி வீதியாக சென்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்திக்கு வழிநெடுகிலும் கூடி நின்ற பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் வரவேற்றனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் வெற்றி நடைபோடும் தமிழகம் தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.