குமரியில் 15 - 18 வயது சிறாருக்கு தடுப்பூசி போடும்பணி துவக்கம்

குமரியில், 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.;

Update: 2022-01-03 07:30 GMT

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் வைத்து நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை, தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று,முதல் 15 முதல்,  18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. அதன்படி இன்றைய தினம் நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் வைத்து நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை, தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News