நாளை 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு
நாளை நாகர்கோவில் மாநகரத்தில் உள்ள 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.;
தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் வரும் 12 ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அதன் படி மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன, அதன்படி மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் முகாம்கள் நடைபெறும் என அறிவித்த மாநகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.
மாநகர மக்கள் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் வீடுகள் அருகிலேயே நடைபெறும் முகாமிற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.