உற்பத்தி செய்த மொத்த நெல்லையும், அரசே கொள்முதல் செய்ய வேண்டும், விவசாய சங்கம்

உற்பத்தி செய்த மொத்த நெல்லையும அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-17 13:30 GMT

கன்னியாகுமரியில் விவசாய சங்க நிர்வாகி சண்முகம் பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்கு விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இட வசதிகளும் இல்லாத நிலை உள்ளது, விவசாயி உற்பத்தி செய்யும் மொத்த நெல்ளையும் கொள்முதல் செய்ய வில்லை என்றால் அரசாங்கம் எதற்கு என கேள்வி எழுப்பினார்.

மேலும் கொள்முதல் நிலையங்களில் நிபந்தனைகள் விதிப்பதும் லஞ்சம் பெறுவதும் தொடரும் நிலையில் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் தமிழக உணவுத்துறை அமைச்சர் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக ஆய்வு செய்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

அதே போன்ற நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டா சிட்டா கேட்கிறார்கள் அதனைக் கொடுத்தால்தான் நெல் கொள்முதல் செய்கிறார்கள் இந்த நிலையை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News