என் வீட்டில் கூட என்னை தேட மாட்டார்கள், எடப்பாடி பழனிச்சாமி தேடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

என் வீட்டில் கூட என்னைத் தேட மாட்டார்கள், அந்த அளவிற்கு எடப்பாடி கே.பழனிச்சாமி என்னை தேடுகிறார் -உதயநிதி ஸ்டாலின்

Update: 2022-02-15 00:21 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலில் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசி வந்தார். இப்போது தலைவரை விட்டு விட்டு கடந்த இரண்டு நாட்களாக என்னை பற்றி பேசி வருகிறார்.

பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு போய்விட்டார் என என்னை தேடிக்கொண்டு இருக்கிறார், என்னை வீட்டில் கூட தேடமாட்டார்கள், ஆனால் எடப்பாடி பழனிசாமி தேடி வருகிறார். கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன், அது தெரியாமல் என்னை தேடி வருகிறார்.

ராகுல் காந்தி ஐந்து நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மோடியை பார்த்து சவால் விட்டார், தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பா.ஜ.கவால் கால் வைக்க முடியாது என்று சவால்விட்டதோடு, தமிழகத்தை பார்த்தாவது திருந்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

பா.ஜ.க விற்கும், அ.தி.மு.க விற்கும் சிம்ம சொப்பனமாக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மாநில உரிமை பறிக்கப்படும்போது எல்லாம் நம் முதல்வர்தான் குரல் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக நாகர்கோவில் புறக்கணிக்கப்படுள்ளது, நாங்கள் 8 மாதங்களில் சாலைகளை சீரமைக்க 26 கோடி ஒதுக்கி உள்ளோம் என பேசினார்.

Tags:    

Similar News