மக்கள் பயன்பாட்டிற்கு 17 புதிய வாகனங்கள் - மாநகராட்சி ஏற்பாடு
நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாட்டின் மக்கள் பயன்பாட்டிற்காக்க 17 புதிய வாகனங்களின் சேவை இன்று தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் எடுத்து செல்ல தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக 17 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி இன்று முதல் அந்த வாகனங்கள் மாநகர பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக பகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.