புறா வளர்ப்பதில் தகராறு: போலீஸ்காரர் கொலை - 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது..!
புறா வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலை நகரை சேர்ந்த சரவணன் ( 32), மணிமுத்தாறு சிறப்பு ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்த இவரை காவல்துறை சஸ்பெண்ட் செய்ததால் கடந்த 2 மாதங்களாக நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் சரவணனுக்கு இடையே புறா வளர்ப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடராக ரஞ்சித்திற்கும் சரவணனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம் என கூறப்படுகிறது, இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ரஞ்சித், சரவணனை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் கழுத்து, வயறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனை மீட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சரவணன் உயிரிழந்தார், குற்றவாளி ரமேஷ் தப்பியோடிய நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளி ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.
மோசமாக பேசுவதோடு அவசியம் இல்லாமல் சண்டையிட்டு தொடர்ந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சரவணன் தொல்லை கொடுத்ததால் அவரை ஆத்திரத்தில் வெட்டியதாக ரஞ்சித் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தொடர்ந்து அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் சரவணன் காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிட தக்கது.