குப்பை கொட்ட தடை விதித்த மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

குப்பை கொட்ட தடை விதித்த மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

Update: 2021-07-09 15:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்து உள்ளது.

குப்பைகளை வீதிகளில் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வண்ணம் தற்பொழுது ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனிடையே மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி சாலை ஓரங்களில் குப்பை கொட்டும் பகுதிகளில் சிறிய சிறிய அளவிலான சாலையோர பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி,  ஆயுதப்படை மைதானம் சாலையில் சாலையோர பகுதியில் இன்றைய தினம் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.  இதனை மாநகர் நல அலுவலர் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News